கம்ப்யூட்டர் பைல்களை பாதுகாப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பாதுகாக்க சிறந்த வழி முறைகள் !
வைரஸ் மற்றும் வேறுபல காரணங்களால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள்  அழிந்து போக வாய்ப்பு உண்டு. அந்தமாதிரி சமயங்களில் நாம் பைல்களை வேறு இடங்களில் சேமித்து வைத்திருந்தால் நமக்கு அது பேருதவியாக இருக்கும். தக்க சமயத்தில் அது பயனுள்ளதாக அமையும். கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமானபைல்களை பாதுகாக்க வேண்டு என்றால் அந்த பைல்களை நாம் "பேக்கப்" எடுத்து வேறு சேமிப்பகங்களில் சேமித்து வைக்க வேண்டும் அதுதான் ஒரு  சிறந்த பாதுகாப்பு முறையாக இருக்கும்.

கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை பேக்கப் எடுப்பது,  சேமிப்பது எப்படி ?

கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பேக்கப் எடுப்பது என்பது அதில் உள்ள கோப்புகளை காப்பி செய்து வேறொரு இடத்தில் சேமிப்பது ஆகும். கீழ்கண்ட முறையில் கோப்புகளை சேமிக்கலாம்.

1. அதிக storage வசதி கொண்ட பென்டிரைவில் கோப்புகளை சேமித்து வைக்கலாம்.
2. வேறொரு புதிய ஹார்ட் டிஸ்க் - External Hard Disk வாங்கி, அதில் பைல்களை  காப்பி செய்து ஸ்டோர் செய்து வைக்கலாம்.
3. ஆன்லைனில் கிடைக்கும் Free File Storage Websites இணையதளங்களில் Cloud Storage சேமித்து வைக்கலாம்.

சில கிளவுட் ஸ்டோரேஜ் இணையதளங்கள்:
1. கூகிள் டிரைவ்
2. மைக்ரோசாப்ட் SkyDrive

Cloud Storage மூலம் சேமிக்கும் பைல்களை உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கம்ப்யூட்டர், மொபைல் மூலம் மீண்டும் எடுத்து பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனாலும் கூட இந்த குளூட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்ட கோப்புகளை திறந்து பயன்படுத்தி கொள்ளலாம். தேவையெனில் அக் கோப்புகளை கம்ப்யூட்டரிலும் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். இம்முறையே கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பாதுகாக்க சிறந்த வழிகள் ஆகும்.