chip level motherboard repairing guide,pdf,download,full,best motherboard chip level,computer motherboard repairing guide,chip level motherboard repairing books

Chip Level Repairing Course of Motherboard
DCC - Computer Institute, Deccan Gymkhana
582, Datacare Corporation, Sunny Pride, Deccan Gymkhana,  Pune - 411004
Coaching for CCNA, A+, N+, Chip Level Repair Course and MCITP Certification.
Alpha Computers, Karve Nagar,Plot No.2, Natraj Society, Karve Nagar,  Pune - 411052

Laptop Repairing Chip Level Course
 http://www.expertlaptoprepairing.in/laptop-repairing-training-institute-Navi-Mumbai.html

laptop chip level training- Corona Institute Of Technology

DSI Solutions, Perambur,215, Paper Mills Road, Perambur,  Chennai - 600011
sales & service of branded computers & Laptops like Compaq, HP & LG.
sales & services of computer accessories

A Orange Systems, Saidapet,New #121/Old #50, Kodambakkam Road, Mettuppalayam, Saidapet West, Saidapet,  Chennai - 600033
 Sales, Service and Rentals of all brands. online clarification with immediate response.

Data Safe, Egmore,Ethiraj Salai, 10, Wellington Estate, Egmore,  Chennai - 600008
deal with data recovery services.



கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க வேண்டுமானால் முறையானபராமரிப்பு அவசியம்.  சில பராமரிப்புகளை செய்வதன் மூலம் நீங்கள் நீண்ட நாட்கள் கம்ப்யூட்டர் பழுதாகமால் இருக்க வைக்கலாம்..

கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பாகங்கள் அதிக வெப்பமடையாமல் ஒரே சீரான வெப்பநிலையில் வைத்திருப்பதன் மூலம் ரிப்பேர் ஆகாமல் தடுக்கலாம் சாதாரணமாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும், அதன் உள் பாகங்கள் அதிக வெப்பமடையாமல் இருக்க அதில் சிறிய காற்றாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். அக்காற்றாடிகள் வெளியில் இருக்கும் வெப்ப காற்று கம்ப்யூட்டருக்குள் புகாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும்.

காற்றாடிகள் இருந்தும் கம்ப்யூட்டர் சில சமயங்களில் அதிக வெப்பமடைந்துவிடும். இதற்கு காரணம் அதன் மீது வந்து படியும் தூசிகள்தான்.வெப்பத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள அக்காற்றிகளின் மீது கம்ப்யூட்டர் கேபினில் காற்றோட்ட வசதிக்காக விடப்பட்டிருக்கும் துளைகள் வழியாக தூசிகள் வந்து படிகின்றன. தொடர்ச்சியாக தூசிகள் கம்ப்யூட்டருக்குள் புகுவதால், சிபியூ கேபின் உள்ளே இருக்கும் மதர்போர்ட் COMPUTER MOTHERBOARD மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள நுட்பமான பாகங்கள்அனைத்தும் தூசிகளால் மூடப்படுகின்றன.  இதனால் அப்பாகங்ககளிலிருந்து வெளிப்படும் வெப்பம் சரிவர வெளியேறாமல் சிபியூ அதிக வெப்பமடைகிறது. சி.பியூவின் இயல்பு வெப்பநிலை 55 டிகிரி. ஐம்பத்தைந்து டிகிரிக்கும் சிபியூ கேபின் உள் வெப்பம் அதிகரிக்கும்போது கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிவிடும்.

சிபியூவின் வெப்ப நிலையை கண்காணிக்கும் மென்பொருள்

CPU -ன் வெப்பநிலையை கண்காணிக்க என ஒரு மென்பொருள் உண்டு. அதன் பெயர் கோர் டெம்ப் (core temp). இந்த மென்பொருளை பயன்படுத்தி சிபியூவின் தற்போதைய வெப்பநிலையை அறிந்துகொள்ள முடியும் இயல்புக்கு மாறாக அதிக வெப்பநிலையில் CPU இருந்தால் கண்டிப்பாக அதில் தூசிகள் அதிகம் அடைத்து கொண்டிருக்கிறது என்று பொருள்.ஒரு சில வகை சி.பி.யூக்கள் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் இயங்காத வண்ணம் அதனுடையஜங்சன் (Junction) தெர்மல்கட்டாப்(thermal cutoff)இருக்கும்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க ஹார்ட் டிஸ்க் பராமரிப்பு:
கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் எவ்வளவு வெப்பநிலையில் உள்ளது என்பதை கண்டறிய கிறிஸ்டல் டிஸ்க் இன்பர்மேஷன் (crystaldiskinfo) என்ற பயன்பாடு உதவும். Hard Disk-ன் இயல்பு நிலை வெப்பம் 20 டிகிரி முதல் 55 டிகிர வரை இருக்க வேண்டும். அதற்கு மேலான வெப்பநிலை எனில் கண்டிப்பாக உங்கள் கணினி பாதிப்புக்கு உள்ளாகும்.

சில சமயம் தூசிகள் நாம் இணைக்கும் இணைப்பானில் (ports, Junction, connection)ஆகியவைகளில் படிந்து அதில் இயல்பாக உள்ள இணைப்புகளை மாற்றி அமைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. சில வேளைகளில் இதுபோன்ற இணைப்பான்களின் மூலம் இணைப்பை ஏற்படுத்த முடியாமல் தடங்கள் செய்யும்.

தூசிகளினால் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆவதை தடுக்க?

லேப்டாப் போன்ற மடி கணினிகளை நல்ல காற்றோட்டமான இடங்களில் வைத்து பயன்படுத்தலாம்.Desktop என்று சொல்லக்கூடிய மேசைக் கணினிகளின் CPU cabin -ஐ கழற்றி, அதில் உள்ள தூசிகளை Air Compressor, வேக்வம் கிளீனர், லிக்வட் ப்ரீ டஸ்ட்டிங் (liquid-free dusting) கொண்டு தூய்மைப்படுத்தலாம்.
இவ்வாறு கம்ப்யூட்டருக்குள் படியும் அழுக்கு மற்றும் தூசிகளை முறையாக அகற்றி பராமரித்தால் கம்ப்யூட்டர் அதிக வெப்பமடைவது தடுக்கப்படும். அதிக வெப்பமடையாதகம்ப்யூட்டர் விரைவில் ரிப்பேர் ஆகாமல் இருக்கும்

KeyBoard சுத்தம்:
1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.
2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்...
3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்...
4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்..
தீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம "பளிச்"ன்னு மின்னும்.
Mouse சுத்தம்:
நாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.
இப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. "Air Bump" வச்சும் சுத்தப்படுத்தலாம்.
Screen சுத்தம்:
அதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும். ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற "வெல்வெட்"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...இதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.....

கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்வது எப்படி?
மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.

மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது:
டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:
கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம்.ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

Missing Operating System:
சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.

Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லதுSCANDISKபயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

 ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

Monitor மானிட்டர் ரிப்பேர் செய்வது எப்படி?
முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம்  செல்கிறதா என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.
அடுத்ததாக உங்கள் மானிட்டரில் brightness மற்றும் contrast adjust செய்வதற்கான switch control கொடுத்திருப்பார்கள். இதனை adjust செய்து பார்க்கவும். இவற்றை adjust செய்தால் மானிட்டர் சரியாகலாம்.

அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.

இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த CPU-வில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்க வில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.

 முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.

இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் boot ஆகும் போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் தெரியும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய display card சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய display card பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான்.

கம்ப்யூட்டர் பாதுகாப்பு:
உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கம்ப்யூட்டர் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் சாதனங்களுக்கு சரியான மின் இணைப்பு, மின்வழங்கிகளைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
நேரடியாக மின்சார இணைப்பை கொடுக்க வேண்டாம்.
கம்ப்யூட்டர்களுக்கென வழங்கப்படும் தரமான மின்சார வழங்கியை (UPS)பயன்படுத்தலாம்.
மின் வழங்கிகளைப் பயன்படுத்துவதால் உங்களுடைய கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமலும் இருக்கும்.
உங்களுடைய ஆயிரக்கணக்கான பணமும் செலவழிவதைத் தவிர்க்க முடியும்.
யூ.பி.எஸ் பயன்படுத்துவது உங்களுடைய கம்ப்யூட்டரை பாதுகாக்கும்.

புரோகிராம்களை மேம்படுத்துங்கள்:
கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம் மற்றும் ஹார்ட் டிரைவ்களை அப்டேட்டிவ்வாக வைத்திருப்பதைப்போன்ற நல்லதொரு விஷயம் வேறெதுவும் இல்லை.
எந்த ஒரு மென்பொருள் தயாரிப்பாளரும், அதை வெளியிட்ட பிறகு அதிலுள்ள errors கண்டு பிடித்து அதற்கெற்ற அப்டேட்களை கொடுத்து அந்த பிரச்சினைகளை தீர்ப்பார்கள்.
குறிப்பாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால்.. அதிலிருக்கும் வழுக்களைப் பயன்படுத்தி புதிய வைரஸ் புரோகிராம்களை இணையவெளியில் உலவ விடுவார்கள்.
அப்புதிய வைரஸ்களை கண்டுபிடிக்கும் அளவிற்கு மென்பொருளில் செய்நிரல்கள் இல்லாது இருக்கலாம்.
அந்த புதிய வைரசை கண்டுபிடித்ததும், அந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமானது அதற்கான அப்டேட்களை வழங்கும்.
தொடர்ச்சியாக இதுபோல புதிய புதிய வைரஸ்கள் வரும்பொழுது அதைத் தடுத்து நிறுத்தும் வித்தில் புதிய புதிய அப்டேட்களை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அதனால் தொடர்ந்து ஆண்ட்டி வைரசை அப்டேட் செய்ய வேண்டும் என பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்கள் மட்டுமல்ல..
கம்ப்யூட்டர் சிஸ்டத்திலுள்ள ஒவ்வொரு புரோகிராமிற்கு இது பொருந்தும்.
மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் இதுபோன்ற அப்டேட்கள் உண்டு.
இணையத்தை அணுக பயன்படும் இன்டர்நெட் பிரௌசர்களிலும் இதுபோன்ற புதிய அப்டேட்கள் கிடைக்கும்.
அதில் இணைந்து இயங்கும் துணை நிரல்பொதிகள் மற்றும் பிளகின்கள் ஆகியவற்றிற்கும் அப்டேட்கள் உண்டு.
அவ்வாறு up-to-date புரோகிராம்கள் மேன்படுத்துவதால், எந்த ஒரு சிக்கலில்லாமல் அவை இயங்கும்.
எனவே கம்ப்யூட்டர் பயனர்கள் புரோகிராம் அப்டேட்களிலும் கவனம்செலுத்த வேண்டும்.


COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக
C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research
COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.


speedy shut down
கணினியை shut down செய்யும்போது சில நேரங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால் அதே நேரத்தில் பல்வேறான செயல்கள் Background processes இல் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றாய் முடிவடையும் வரை காத்திருந்து, பின்னர் தான் கணினி shut down ஆகும் .
இதனை உடனடியாக நிறுத்துவதற்கு
Start ---Run இல் சென்று regedit என type செய்யுங்கள் .
பின்னர் வரும் சட்டத்தில் (Window), இடது புறத்தில், HKEY_CURRENT USER\Control Panel\Desktop என்னும் இடத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் வலது புறத்தில், AutoEndTasks என்பதை இரண்டு முறை சொடுக்கு செய்து அதன் மதிப்பை பூஜ்ஜியம் என்பதிலிருந்து ஒன்று என மாற்றுங்கள்.இபொழுது OK கொடுத்து வெளியேறுங்கள்.
இப்போது முன்பை விட வேகமாக கணினி shutdown ஆவதை காணலாம்.

Pen drive வை பயன்படுத்தி வேகத்தை அதிகரிக்க
 Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.

இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.
ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
8. set என்பதை click செய்யவும்.
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

.கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா?
கணினியை பாதுகாத்து மேம்படுத்த..
கம்ப்யூட்டர் சாவி பென்டிரைவ்
கணினியின் வேகத்தை அதிகப்படுத்த
கம்ப்யூட்டரில் மால்வேர் பிரச்னையா?
கம்ப்யூட்டரில் டூப்ளிகேட் பைல்கள் நீக்க
ஹேக்கர்களிடமிருந்து தப்புவது எப்படி?
கணினியை காக்க வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
மென்பொருள் தகவல்கள்
வைரஸ்களை துவம்சம் செய்ய மென்பொருள்
வைரஸ், ஸ்பைவேர், பிஸ்சிங் மற்றும் ஸ்பேமிலிருந்து பாதுகாப்பு:
மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீல் பயன்பாடு
விரைவாக பிரௌசிங் செய்ய
கணினி அடிப்படைத் தகவல்கள்
கம்ப்யூட்டரில் பங்சன் கீ பயன்பாடு
MS-Office க்கு மாற்றீடு King Office மென்பொருள்
போட்டோஷாப் இல்லாம் பென்சில் டிராயிங்
சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்க
முன்னூறு இலவச மென்பொருள்கள்
கணினி விரைவாக திறக்க
கணினி திரையை அணைக்க மென்பொருள்
ஹேக்கர்களிடமிருந்து தப்புவது எப்படி?
கணினியை காக்க வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
மென்பொருள் தகவல்கள்
வைரஸ்களை துவம்சம் செய்ய மென்பொருள்
வைரஸ், ஸ்பைவேர், பிஸ்சிங் மற்றும் ஸ்பேமிலிருந்து பாதுகாப்பு: